அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

நல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத் தொடரில் பேசலாம் என்று இருக்கிறேன். ஒரு சினிமா ரசிகன் என்ற நிலையிலேயே இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரை நான் பார்த்த படங்கள் மற்றும் படித்த புத்தகங்களின் மூலம் நான் புரிந்துகொண்டிருப்பதையே இங்கே சொல்லப் போகிறேன்.

தமிழில் ஏற்கனவே நம் ‘வாத்தியார்’ சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி என்று எழுதியிருக்கிறார். பதிவுலக நண்பர் கருந்தேள் ராஜேஸும் ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ என்று எழுதிக்கொண்டு வருகிறார். எனவே புதிதாக இன்னொரு தொடருக்கான அவசியம் என்ன என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆங்கிலத்தில் திரைக்கதை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன; இன்னும் எழுதப்பட்டு வருகின்றன.

அதனோடு ஒப்பிடும்போது தமிழில் திரைக்கதை பற்றி வந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நான் மட்டுமல்ல, சினிமா மேல் ஆர்வம் உள்ள அனைவருமே இந்த டாபிக் பற்றி எழுதினாலும் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். மேலும் அதிகளவு இத்தகைய புத்தகங்கள் வருவது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்பெடுத்தும். அது திரைக்கதையின் முக்கியத்துவத்தை சினிமாத்துறையினருக்கு தொடர்ந்து நினைவூட்ட உதவும் என்று நம்புகிறேன்.

‘புக் படிச்சா, ஸ்க்ரீன்ப்ளே எழுதிடலாமா?’ என்று ஏளனப்பேச்சுக்கள் வரும் என்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு திரைக்கதை பற்றிய விழிப்புணர்வு சென்று சேரும்வரை, எம்மைப் போன்ற அரைகுறைகள் இந்த டாபிக்கைப் பற்றி விரிவாகப் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.

நான் அமெரிக்காவில் இருந்தபோது, தியேட்டருக்குச் செல்லாமலேயே இருந்தேன். (கஞ்சத்தனம் தான்!) அப்போது என் ஆபீஸ் நண்பர் மைக், என்னை ஹல்க் படத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சூப்பர் மேன் தவிர்த்து பிற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்கள் எனக்கு பிடிப்பதில்லை.

‘ஒரே மாதிரி இருக்கு’ என்று நான் ஹல்க் பற்றி கம்ப்ளைண்ட் செய்தபோது தான், மைக் ‘இவையெல்லாம் ஒரே ஸ்க்ரீப்ளே டெப்ம்ளேட்டில் வருபவை..ஆக்ட்டு. இன்சைட்டிங் இன்சிடிடெண்ட்………’ என்று என்னென்னவோ சொன்னார். ‘எனக்கு இதெல்லாம் தெரியாது சாமீ..எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஹாலிவுட் பாலா தான்’ என்று நான் கெஞ்சியபோது ‘அப்போ ப்ளேக் ஸ்னிடர்ல இருந்து ஆரம்பி..அது ஈஸியா இருக்கும்.புரியும்’ என்றார். Blake Snyder-ல் ஆரம்பித்தது, இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது. அது இப்படி பதிவுலகில் உபயோகப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை, நன்றி மைக்.

இயக்குநர் ஸ்ரீதர்

20oct_sridhar2

நான் பல புத்தகங்களை இதுவரை படித்து, குறித்து வைத்திருக்கும் நோட்ஸில் இருந்தே, இந்த தொடரை எழுதப் போகிறேன். கலைஞர், பாலச்சந்தர், ஸ்ரீதர் மற்றும் பாக்கியராஜ் என பல ஜாம்பவான்கள் திரைக்கதையில் தனி முத்திரை பதித்திருக்கிறார்கள். அவர்களின் படங்களில் இருந்து பொருத்தமான உதாரணங்களைத் தர முயல்கிறேன். எனவே இந்த தொடரை ஒரு சினிமா ரசிகனின் பெர்னல் நோட்ஸ் என்றே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தொடரில் அவ்வப்போதும், தொடரின் இறுதியிலும் அந்த புத்தகங்களின் பெயர் தரப்படும்.

இந்தத் தொடர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றது.

  1.  திரைக்கதையின் அடிப்படைக்கூறுகள், ஒரு கதையை திரைக்கதையாக டெவலப் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி முதல் பாகத்தில் பேசுவோம். கதையின் கரு, குறிக்கோள், முரண்பாடுகள் போன்ற  விஷயங்களை உதாரணங்களுடன் பார்ப்போம்.
  2.   இரண்டாம் பாகத்தில் பொதுவான திரைக்கதையின் வடிவங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். பின்னர் Save the Cat புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறை பற்றி விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக அவரது Beat sheet கான்செப்ட்டை விளக்கும் பக்கங்கள், நேரடியாக இந்த தொடரில் உபயோகப்படுத்தப்படும். அவர்களிடம் இதற்கு அனுமதி வாங்கியிருக்கிறேன் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  3.  மூன்று அங்க வடிவம்(3 Act Structure) என்பது ஹாலிவுட் சினிமா தாண்டி, ஐரோப்பிய-ஆசிய சினிமாக்களில் பெரிதாக செல்லுபடியாகவில்லை. அது ஏன், அதை எப்படி தமிழ் சினிமாவிற்கு மேட்ச் பண்ணுவது, தமிழ் சினிமா எந்த வகையான வடிவத்தில் வெற்றியடைகிறது என்று அலசுவோம்.
 இயக்குநர் மகேந்திரன்

1mahendran_1765497g

குறிப்பாக, தமிழ் சினிமா உதாரணங்களை மட்டுமே வைத்து, இந்தத் தொடரை எழுதுவதாக எண்ணம். ஒவ்வொரு ஞாயிறு இரவும் இந்தத் தொடர் வெளியிடப்படும். இதுவரை எனது எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவளித்தது

நன்றி - செங்கோவி

நன்றி – செங்கோவி

போன்றே, இதற்கும் ஆதரவை வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தொடரில் தரமான வணிக சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்று இணைந்தே clashroyaleboom கற்றுக்கொள்வோம், வாருங்கள்.

(தொடரும்)


 

Comments

comments