IMG_9384தமிழ்சினிமாவில் நடப்பதைப்போலவே தமிழ்சினிமா சம்மந்தப்பட்ட விழாவிலும் நம்ப முடியாத நம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

டெல்லி திகார் சிறைச்சாலையில் அதிகாரியாக இருந்த கிரண்பேடியய்ம, அதே சிறையில் கைதியாக இருந்த பவர்ஸ்டார் என்கிற சீனிவாசனும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

இப்படியொரு கண்கொள்ளாக்காட்சியை நாம் கண்டது பேரரசு இயக்கும் திகார் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில்…

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன், உன்னி முகுந்தன், அகன்ஷா பூரி மற்றும் பலர் நடிக்கும் ‘திகார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

‘திகார்’ பட இசையை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி வெளியிட்டார்.

இந்த விழாவுக்கு திகார் சிறையில் சில நாட்கள் கைதியாக இருந்த பவர்ஸ்டாரையும் அழைத்திருந்தனர்.

அவர் படத்தைப் பற்றி பேசாமல், பேரரசுவின் வேண்டுகோளை ஏற்று திகார் சிறை அனுபவங்களை பேச ஆரம்பித்தார்…

திடீர்னு ஒரு நாள் நைட்டு 12 மணிக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போனாங்க. எதுக்குன்னு கேட்டேன், விசாரணைன்னு சொன்னாங்க. ஏங்க, முதல்லயே சொல்லக் கூடாது செலவுக்கு பணம்லாம் எடுத்து வச்சிருப்பேனேன்னு கேட்டேன்.

எதுக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போறாங்க…தூக்குல போட்டுருவாங்களோன்னு முதல்ல கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் என்னதா ஆகுதுன்னு பார்ப்போமேன்னு கிளம்பிட்டேன்.

நான் வேணும்னே எந்தத் தப்பும் பண்ணலை, கூட இருந்தவங்க பழிவாங்கிட்டாங்க. கோடிக்கணக்கான ரூபாயை இழந்து, கோடிக்கணக்கான பொருளை இழந்து , இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கன்னா, அதுக்குக் காரணம் கடவுள்தான்.

என்னை நைட்டு எட்டு மணிக்கு கொண்டு போய் விட்டாங்க. ஒண்ணுமே தெரியலை, ஒரு ரூம் கொடுத்தாங்க, அங்க ரெண்டு பேர் படுத்திருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சேன்.

நான் உண்மையிலேயே கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும், அங்க திகார் ஜெயில்ல இருக்கிற 1200 போலீசும் எனக்கு ரசிகரா மாறிட்டாங்க.

டெல்லி ‘திகார்’ ஜெயில்ங்கறது உண்மையிலேயே நல்ல ஜெயில். இந்தியாவிலேயே எந்த ஜெயில்லயுமே ஐஸ் க்ரீம், கூல்டிரிங்ஸ், இதெல்லாம் கிடைக்காது, ஆனால் அங்க கிடைக்கும்.

அவங்க கிட்ட முதல் கேள்வி என்ன பவரு இங்க எதுக்கு வந்திருக்கீங்க, ஏதாச்சும் ஷுட்டிங்கான்னாங்க. நாம பொய் சொல்ல முடியாது, எப்படியும் 20 நாளாச்சும் இருந்தால்தான் பெயில் கிடைக்கும். ‘இல்ல…அப்படி..ஒரு வழக்கு விஷயமா வந்திருக்கன்னு சொன்னேன்…

பரவாயில்லை பவரு..இங்க இருக்கிறதப் பத்தி போய் படம் எடுங்கன்னாங்க. உங்க கூட ரூம்ல நைட்டு படுத்திருந்தது யாரு தெரியுமான்னு கேட்டாங்க, அவங்க கற்பழிப்பு கேஸ்ல உள்ள வந்தவங்கன்னாங்க…அப்பாடா…நம்மள விட்டாங்கடா சாமின்னு..நினைச்சேன்.

ஒரு நாள் இன்னொரு செல்லுக்குப் போனேன், அங்கப் பார்த்தால் பெரிய பெரிய முதலைங்க..சாதாரணமான ஆளுங்க கிடையாது. என்னைக் கேட்டாங்க, என்ன விஷயம்னு, இல்லங்க இந்த மாதிரி சின்ன விஷயம்ங்கன்னு சொன்னேன். என்னது சின்ன விஷயமா, நான் எவ்வளவு போட்டிருக்கேன் தெரியுமா…இரண்டாயிரம் கோடி..நான் கடப்பாரை…நீ குண்டூசி..ன்னாங்க.

எதுக்கு இத சொல்றன்னா, ஒவ்வொரு இடம் போகும் போதும், நமக்கு விதவிதமான அனுபவம் கிடைக்குது. இந்தியால எங்கு சென்றாலும் என்னால சமாளிக்க முடியும்.

நான் எல்லாத்தையும் விட்டுட்டேன், என் ரசிகர்கள்ல ஒருத்தன் சொன்னான், தலைவா நீ உள்ள போ, உனக்கு உயிரே கொடுப்பன்னான், ஆனால், ஒரு பாட்டில் தண்ணி கூட கொடுக்கலை.”

என்று பேசினார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

தன் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்தால் கிரண்பேடி எந்த விழாவுக்கும் வருவார். அதற்காக பவர்ஸ்டாரை பக்கத்தில் உட்கார வைத்தது எல்லாம் ரொம்ப ஓவர்…

Comments

comments