lyricsmontage2கிடைத்த துண்டுக் காகிதத்தில் மனசுக்குள் கிறுக்கும்போது தான் கவிதை பிறக்கிறது. அல்லது அப்படிப் பிறப்பதை கவிதை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம்.

பெண் தான் பல கவிஞர்களையும் கவிதைகளையும் உருவாக்குகிறாள். அல்லது பெண்ணால் தான் பலர் கவிஞனாக அவதாரம் எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

நீ… நான்… நிலா… காதல் கண்ணீர்… வலி…என்று துண்டு துண்டு வார்த்தைகளை எழுதினால் கவிதை கிடைத்து விடுகிறது. ஆனால் சினிமாவில் பாடல் அப்படி இல்லை…

மெட்டுன்னு ஒண்ணு வச்சிருக்காங்களே… அதுக்குள்ள சுத்தி சுழன்று எழுதணுமே… கவிதைக் கிறுக்கிய வீராப்போடு பாட்டெழுத வந்து… தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அப்படியே திரும்பிப்போனவர்களும் இருக்கிறார்கள்.

உங்களுக்கு கவிதை எழுத வருகிறது… ஆனா பாட்டு. அந்தக் கவலையே வேண்டாம்.. வாங்க எழுதலாம்.

உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing). இந்த பயிற்சியை முன் நின்று ஒருங்கிணைத்து நடத்துபவர் பாடலாசிரியர் ப்ரியன் என்பது சிறப்புச் செய்தி.

எஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியில், ஜீலை 2013-ஆம் ஆண்டிற்கான, திரைப்பாடல் இயற்றுநர் – தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விரும்புபவர்கள்.. diplyric.srm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல் என, முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.

Notebook & Penமேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்..
வகுப்பு :
திரைப்பாடல் இயற்றுநர்  – ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (தினசரி மற்றும் வாரயிறுதி)
குறைந்தபட்சக் கல்வித்தகுதி  – பன்னிரெண்டாம் வகுப்பு (any group)
சிறப்புத் தகுதி – தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.
கூடுதல் தகுதி – கவிதை.. பாடல் படைத்த படைப்பு அல்லது பதிவு ஏதாவது.
இடம் – எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.

சேர்க்கை அலுவலகம் :
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் நகர், காட்டாங்குளத்தூர் – 603203

மேலும் விவரங்களுக்கு..
பாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) – 8056161139,
மின்னஞ்சல் – diplyric.srm@gmail.com, diplyric.piriyan@gmail.com

Comments

comments