vijaykanth-son-shanmuga-pandian-sagaptham-movie-stills51386593790       விஜயகாந்த மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் மலேசியாவில் உள்ள பினாங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக பினாங்கு கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் உள்ளே நடுக்கடலில் சண்டைக்காட்சியை எடுத்து வருகிறார்கள். 50 சண்டை கலைஞர்கள், 200 துணை நடிகர்கள், 15 எந்திர படகுகள், ஒரு கப்பல், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவற்றை பயன்படுத்தி சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. இதற்காக 5 கேமராக்களை பயன்படுத்தினார் ஒளிப்பதிவாளர் பூபதி.

இந்தி வில்லன் சவ்ரவும், சண்முக பாண்டியனும் நேரடியாக மோதும் காட்சிகள் கப்பலில் படமாக்கப்பட்டது. சண்டை காட்சிகளை தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா வடிவமைத்திருந்தார். விஜயகாந்த் மலேசியாவிலேயே இருந்து படப்பிடிப்புகளை நேரடியாக கவனித்து வருகிறார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகியிருப்பதாக வட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Comments

comments