இரண்டு வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘வாலு’. ஹன்சிகா , சந்தானம் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் சந்தர்.

????????????????????????????????????????படத்திற்கு இசை தமன். சிம்பு படத்தில் அவரது அப்பா டி.ஆர். பாடிய பாடல்கள் என்றாலே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகும்.

’வல்லவன்’ எம்மாடி ஆத்தாடி, ‘ஒஸ்தி’ கலாசலா பாடல் என இவ்விரு பாடல்களும் இப்போதும் பல சேனல்களின் குத்துப்பாட்டு லிஸ்ட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதே பாணியில் தற்போது வெளியாக உள்ள ‘வாலு’ படத்திலும் ‘தாரு மாறு வாத்தியாரு’ என்ற பாடல் உருவாகி வருகிறது.

இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் , சிம்பு என 4 கெட்டப்களில் சிம்பு வித்தியாசமாக டான்ஸ் ஆடி இருக்கிறாராம்.

Comments

comments